தொகைநிலைத்தொடர்

தொகை எனில் தொகுத்து வருதல் (மறைந்து வருதல்).

வேற்றுமைத்தொகை

வேற்றுமை உருபுகள் மறைந்து(தொக்கி) வருவது வேற்றுமைத்தொகை ஆகும். வேற்றுமை, பெயர்ச் சொல்லின்பொருளை ‘செயப்படுப்பொருள்’ முதலாக வேறுபடுத்தும். அவ்வாறு வேறுபடுத்தும் எழுத்து அல்லது சொற்கள், “வேற்றுமை உருபுகள்” என்றழைக்கப்படுகின்றன. இரண்டு சொற்களுக்கிடையே இவ்வுருபுகள் மறைந்து வருவதே ‘வேற்றுமைத்தொகை’. எட்டு வேற்றுமைகளில் முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைகளுக்கு உருபு இல்லை வேற்றுமை உருபுகள் 6 அகும்.

 1. முதல் வேற்றுமை உருபு = இல்லை (எழுவாய் வேற்றுமை)
 2. இரண்டாம் வேற்றுமை உருபு = ‘ஐ’
 3. மூன்றாம் வேற்றுமை உருபு = ‘ஆல்’
 4. நான்காம் வேற்றுமை உருபு = ‘கு’
 5. ஐந்தாம் வேற்றுமை உருபு = ‘இன்’
 6. ஆறாம் வேற்றுமை உருபு = ‘அது’
 7. ஏழாம் வேற்றுமை உருபு = ‘கண்’
 8. எட்டாம் வேற்றுமை உருபு = இல்லை(விளி வேற்றுமை)

எழுவாய் வேற்றுமை பெயர் மாத்திரையாய் தோன்றி நிற்கும். அவ்வெழுவாய் (பெயர்) ‘ஐ’ முதலிய ஆறு வேற்றுமைகளுக்குரிய உருபுகளையும் ஏற்று நிற்கும்.

முதல் வேற்றுமை/எழுவாய் வேற்றுமை

“பெயர்ச் சொல் எந்த மாற்றமும் அடையாமல் நிற்கும்பொழுது எழுவாய் எனப்படும்.” எந்த [[உருபு|உருபும்] சேராமல் இவ்வாறு எழுவாயாய் அமையும் பெயர்ச் சொல் எழுவாய் வேற்றுமை எனப்படும்.

எ.கா: கண்ணகி வழக்கை உரைத்தாள்.
இரண்டாம் வேற்றுமை/செயற்படுபொருள் வேற்றுமை

பெயர்ச் சொல் ஐ என்ற உருபால் உருபேற்றி அமையும் போது அது இரண்டாம் வேற்றுமை எனப்படும். “யாரை அல்லது எதை என்னும் கோள்விக்கு விடையாக அமைவதுதான் செயற்படுபொருள். இரண்டாம் வேற்றுமை செயற்படுபொருளை உணர்த்துவதால், இதைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் சொல்கிறோம்.”

எ.கா: கண்ணகி வழக்கை உரைத்தாள்.
மூன்றாம் வேற்றுமை

ஆல், ஆன். ஓடு, உடன், கொண்டு ஆகிய உருபுகள் மூன்றாம் வேற்றுமை உருபுகள்.

எ.கா: கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்.
நான்காம் வேற்றுமை

‘கு’ என்பது நான்காம் வேற்றுமையின் உருபு.

எ.கா: பொன்னுக்குப் பாடுபவர் உண்மைப் புலவர் அல்லர்.
ஐந்தாம் வேற்றுமை
 • ஐந்தாம் வேற்றுமை – உருபு – இல், இன்

ஆறாம் வேற்றுமை

 • ஆறாம் வேற்றுமை – உருபு – அது ஆது, அ

ஏழாம் வேற்றுமை

 • ஏழாம் வேற்றுமை- உருபு – இல், கண், இடம்

எட்டாம் வேற்றுமை

 • எட்டாம் வேற்றுமை – உருபு – விளிப் பொருளில் வரும்

Stars Glitter Graphics Dividers | GraphicsGrotto.comStars Glitter Graphics Dividers | GraphicsGrotto.comStars Glitter Graphics Dividers | GraphicsGrotto.com

 

வினைத்தொகை

தமிழ் இலக்கணத்தில் வினைத்தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒருசேரக் குறிக்குமாறு வரும் ஒரு பெயர்ச்சொல். பரவலாக எடுத்துக்காட்டபடும் சொல் ஊறுகாய் என்பது. இச்சொல் ஊறுகின்ற காய், ஊறினகாய், ஊறும் காய் என முக்கால வினைகளையும் குறிக்கும். இதே போல வீசுதென்றல் என்னும் பொழுது வீசுகின்ற தென்றல் (தெற்கு நோக்கி மென்மையாக வீசும் காற்று), வீசிய தென்றல் , வீசும் தென்றல் என்று முக்கால வினையையும் குறிக்கும்.

வினைத்தொகை ஒரு வினைச்சொல்லும், ஒரு பெயர்ச்சொல்லும் இணைந்த கூட்டுச் சொல். முதல் சொல் வினைச்சொல்லாக இருக்கும், பின்வரும் சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும்.

Stars Glitter Graphics Dividers | GraphicsGrotto.comStars Glitter Graphics Dividers | GraphicsGrotto.comStars Glitter Graphics Dividers | GraphicsGrotto.com

பண்புத்தொகை

பண்புத்தொகை என்பது பண்புப்பெயரைச் சேர்ந்து (தொகுத்து) வரும் பெயர்ச்சொல்.[1] ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர். எடுத்துக்காட்டாக,

 • நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்கள் – செம்மை, பசுமை, வெண்மை.
 • வடிவத்தைக் குறிக்குஞ் சொற்கள் – வட்டம், சதுரம்.
 • சுவையைக் குறிக்குஞ் சொற்கள் – இனிமை, கசப்பு
 • குணத்தைக் குறிக்குஞ் சொற்கள் – நன்மை, தீமை
 • எண்ணிக்கையைக் குறிக்குஞ் சொற்கள் – ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும்.

எடுத்துக்காட்டுக்கள்:

 • பெருங்கடல் = பெருமை (பெரிய) + கடல்
 • வெண்கரடி = வெண்மை + கரடி
 • பசும்பொன் = பசுமை + பொன்
 • மூவேந்தர் = மூன்று + வேந்தர்

Stars Glitter Graphics Dividers | GraphicsGrotto.comStars Glitter Graphics Dividers | GraphicsGrotto.comStars Glitter Graphics Dividers | GraphicsGrotto.com

உவமைத்தொகை

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: