வெண்பா

வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். அவற்றுள் வெண்பா என்னும் வகையில் ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரைக் கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கானயாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.

தமிழ் மரபுப்பா வகைகளில் மிகப் பழைய வடிவம் என்பதால் வெண்பாவில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் (அல்லது) தொகுப்புகளின் எண்ணிக்கை மிகுதி. ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.

 1. திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்றி முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ளகுறள் வெண்பா வகையைச் சார்ந்தவை.
 2. நாலடியார் அல்லது நாலடி நானூறு என்பது நானூறு வெண்பாக்களால் ஆனதும், திருக்குறளை ஒத்ததுமான நீதிநூல் வகையைச் சேர்ந்தது.
 3. முத்தொள்ளாயிரம் என்பது வெண்பாக்களால் ஆன, காலத்தால் மிகவும் முற்பட்ட தொகை நூல். கிடைத்திருக்கும் 109 வெண்பாக்களில் மிகப் பெரும்பான்மையும் (ஏறத்தாழ முழுமையும்) நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை.
 4. நள வெண்பா[1] மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.
 5. நீதி வெண்பா[2] மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.
 6. திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை வெண்பா யாப்பில் வாரா என்ற போதிலும் முற்றிலும் வெண்டளையாக அமைந்து ‘ஏலோர் எம்பாவாய்’ என்ற ஈற்றுச் சீர்களை நீக்கினால், ‘பாரோர் புகழப் படிந்து’ போன்ற முச்சீர்களால் கச்சிதமாக அமைந்த பஃறொடை வெண்பா யாப்புக்கு முற்றிலும் பொருந்தியிருப்பதைக் காணலாம்.

இவற்றைத் தவிர, பலவகையான வெண்பாக்களில் அமைந்துள்ள பழைய/புதிய தமிழ் நூல்கள் ஏராளமானவை.

வகைகள்

 • குறள் வெண்பா
 • சிந்தியல் வெண்பா
 • நேரிசை வெண்பா
 • இன்னிசை வெண்பா
 • பஃறொடை வெண்பா
 • கலிவெண்பா

 

 • குறள் வெண்பா

குறள் வெண்பா என்பது வெண்பா வகையின் இரண்டு அடி உள்வகையாகும். புகழ் பெற்ற திருக்குறள் குறள் வெண்பா வகையையே சார்ந்தது.

எடுத்துக் காட்டாக ஒரு திருக்குறள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு

 • சிந்தியல் வெண்பா

சிந்தியல் வெண்பா என்பது தமிழ்ப் பா வகைகளுள் ஒன்றான வெண்பா வகைகளுள் ஒன்று. இது மூன்று அடிகளை மட்டுமே கொண்டிருக்கும். இவற்றில் முதல் இரண்டு அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்திருக்கும். இவ்வாறு நான்கு சீர்களைக் கொண்டுள்ள அடிகள் அளவடிகள் என அழைக்கப்படுகின்றன. சிந்தியல் வெண்பாவின் மூன்றாவது அடி, சிந்தடி என அழக்கப்படும், மூன்று சீர்களைக் கொண்ட அடியாக இருக்கும்.

சிந்தியல் வெண்பாக்களில் இரண்டு வகைகள் உண்டு. அவை,

 1. இன்னிசைச் சிந்தியல் வெண்பா – வெண்பாவின் பொது இலக்கணத்தோடு மூன்றடிகளைக் கொண்டதாய்த் தனிச்சொல்லின்றி, ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் வரும் வெண்பா வகை ஆகும்.
 2. நேரிசைச் சிந்தியல் வெண்பா –  வெண்பாவின் பொது இலக்கணத்தோடு நேரிசை வெண்பாவைப் போல இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்ற ஒரே வகை எதுகை கொண்டு (ஒரு விகற்பத்தானும்) அல்லது இரண்டு வகை எதுகைகள் கொண்டு (இரு விகற்பத்தானும்) மூன்று அடிகள் கொண்டு வருவது ஆகும்.
 • நேரிசை வெண்பா

தமிழிலுள்ள மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றான வெண்பாவின் துணைப் பா வகையாகும். நேரிசை வெண்பாவுக்கான இலக்கணப்படி இது பின்வரும் அமைப்பைக் கொண்டிருக்கும்.

 • பொதுவான வெண்பாவுக்கு உரிய இலக்கணங்களைக் கொண்டிருத்தல்.
 • நான்கு அடிகளை உடையதாக இருத்தல்.
 • இரண்டாவது அடியில் தனிச்சொல் வருதல்.
 • நான்கு அடிகளும் ஒரே வகையான எதுகை உடையனவாகவோ அல்லது முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகை உடையனவாக இருக்க, அடுத்த இரண்டும் வேறுவகை எதுகை உடையனவாகவோ இருத்தல்.

அஞ்சல் மடவனமே உன்ற னணிநடையும்வஞ்சி யனையார் மணிநடையும் – விஞ்சியதுகாணப் பிடித்ததுகா ணென்றான் களிவண்டுமாணப் பிடித்ததார் மன்

 • இன்னிசை வெண்பா

நான்கு அடிகள் கொண்ட ஒரு வெண்பா வகை. நேரிசை வெண்பா என்பதும் நான்கு அடிகளைக் கொண்ட ஒரு வெண்பா வகையே. எனவே வெண்பாக்களில் நான்கு அடிகளைக் கொண்டு, நேரிசை வெண்பாவுக்கு உரிய இலக்கணங்கள் அமையாத ஏனைய வெண்பாக்கள் அனைத்தும் இன்னிசை வெண்பாக்கள் ஆகின்றன.

இலக்கணம்

இரண்டாவது அடியில் தனிச்சொல் அமைவதும், ஒரே வகையான அல்லது இரண்டு வகையான எதுகைகளுடன் அமைவதும் நேரிசை வெண்பாவுக்கான இலக்கணம். எனவே இன்னிசை வெண்பாவில் இவ்விலக்கணங்கள் அமைந்திரா.

 • இன்னிசை வெண்பாவில், ஒரே வகையான அல்லது இரண்டு வகையான எதுகைகள் அமையுமானால், இரண்டாவது அடியில் தனிச்சொல் வராது. ஏனைய அடிகளில் வரலாம்.
 • இரண்டாவது அடியில் தனிச்சொல் வந்தால், வெண்பா ஒரே வகையான எதுகையைக் கொண்டோ, இரண்டு வகையான எதுகைகளைக் கொண்டோ வராது. ஆனால் இரண்டுக்கு மேற்பட்ட எதுகை வகைகளைக் கொண்டு அமையலாம்.
 • பஃறொடை வெண்பா

நான்கு அடிகளுக்கு மேல் அமைந்த வெண்பா பஃறொடை வெண்பா எனப்படுகின்றது. இவ்வெண்பா வகையின் அடிகளில் ஒரே வகையானஎதுகையோ (ஒரு விகற்பம்) அல்லது பலவகை எதுகைகளோ (பல விகற்பம்) வரலாம். பஃறொடை வெண்பா அதிகபட்சம் 12 அடிகள் மட்டுமே கொண்டிருக்கும் என்றும் அதற்கு மேற்படின் அது கலிவெண்பா எனப்படும் என்பதும் சிலரது கருத்து.

நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களில் நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா என்னும் வேறுபாடுகள் இருப்பதுபோல், பஃறொடை வெண்பாக்களிலும் நேரிசை, இன்னிசை வேறுபாடுகள் உண்டு என்று சிலர் கூறுகிறார்கள்.

 • கலிவெண்பா

இது இன்னிசைக் கலிவெண்பா, நேரிசைக் கலிவெண்பா என இருவகைப்படும். இன்னிசைக் கலிவெண்பா பதின்மூன்று அடிகள் முதல் பல அடிகளில் தனிச்சொல் பெறாமல் வரும். நேரிசைக் கலிவெண்பாவின் இரண்டிரண்டு அடிகள் ஒவ்வொரு எதுகையும்தனிச்சொல்லும் பெற்று கண்ணி என்ற பெயரில் பலவாக வரும்.

இன்னிசை கலிவெண்பா

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

-சிவபுராணம்
நேரிசைக் கலிவெண்பா

கல்லாதார் சிங்கம்எனக் கல்விகேள்விக்கு உரியர்
எல்லாரும் நீயாய் இருந்தமையால் – சொல்ஆரும்
என்அடிக ளேஉனைக்கண்டு ஏத்தின்இடர் தீரும்என்று
பொன்அடிக ளேபுகலாப் போற்றினேன்

-தமிழ்விடுதூது
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: