தொடை

தொடை என்பது யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புக்கள் வகையைச் சேர்ந்தது. செய்யுள்களின் சீர்களும், அடிகளும் தொடுத்துச் செல்லுகின்ற முறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் தொடை என வழங்கப்படுகின்றது. செய்யுள்களின் ஓசை நயத்துக்கும், அவற்றின் இனிமைக்கும் தொடைகள் முக்கியமானவை.

தொடை வகைகள்

தொடைகள் பலவகைப் படுகின்றன. இவை,

 1. மோனைத் தொடை
 2. இயைபுத் தொடை
 3. எதுகைத் தொடை
 4. முரண் தொடை
 5. அளபெடைத் தொடை
 6. அந்தாதித் தொடை
 7. இரட்டைத் தொடை
 8. செந்தொடை

என்பனவாகும். இவற்றுள் மோனை, எதுகை, முரண் மற்றும் அளபெடைத் தொடைகள் செய்யுள் அடிகளின் முதற் சீருடன் சம்பந்தப்பட்டிருக்க, இயைபுத் தொடை அடிகளின் இறுதிச் சீர் தொடர்பாக அமைகின்றது.

 1. மோனைத் தொடை

இதிலிருந்து மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன. மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது.

ழுத்துக்கள் ஒத்து வருதல் எனும்போது ஒரே எழுத்துக்கள் வருதல் என்பது பொருளாகாது. ஒத்த எழுத்துக்கள் பின்வருமாறு அமையலாம்.

 1. ஒரே எழுத்து ஒன்றுக்கு ஒன்று மோனையாதல்.
 2. ஒரே இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாதல்

உயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன.

உயிரெழுத்து இனங்கள்

1. அ, ஆ, இ, ஔ
2. இ, ஈ, எ, ஏ, யா
3. உ, ஊ, ஒ, ஓ

மெய்யெழுத்து இனங்கள்

1. ஞ், ந்
2. ம், வ்
3. த், ச்
அடிமோனைகள்
ம்பொருள் என்ப ம்மக்கள் அவர்பொருள்ந்தம் வினையான் வரும்
சீர்மோனைகள்
ற்க சடற ற்றவை ற்றபின்

 

2. இயைபுத் தொடை

ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது இயைபுத் தொடை என்று கூறப்படுகின்றது. ஒரே அடியில் உள்ள சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றி வந்தாலும், அடியின் இறுதிச் சொல்லும் அவ்வடியில் வரும் சீர்களின் சொற்கள் ஒன்றி வந்தாலும் அது இயைபுத் தொடையேயாகும். இதன் படி ஒரு செய்யுளில் இயைபுத் தொடை நான்கு வகையில் அமைய முடியும்.

 1. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.
 2. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதிச் சொற்கள் ஒன்றுதல்.
 3. ஒரு அடியிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.
 4. ஒரு அடியில் வரும் இறுதிச் சொல் அந்த அடியில் வரும் இன்னொரு சீரிலாவது ஒன்றி வருதல்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

3.  எதுகைத் தொடை

வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்

எதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை.

4. முரண் தொடை

செய்யுளில், சொல் அல்லது பொருள் முரண்பட்டு நயம் பயக்கும் வகையில் அமைவது முரண் தொடை ஆகும். இது செய்யுளின் வெவ்வேறு அடிகளின்முதற் சீர்களில் அமையலாம் அல்லது ஒரே அடியின் வெவ்வேறு சீர்களிலும் அமையலாம்.

5. அளபெடைத் தொடை

செய்யுள்களில் அடிகளில் அளபெடை அமைய வருவது அளபெடைத் தொடை ஆகும். எழுத்துக்கள் தமக்குரிய மாத்திரைகளுக்கு அதிகமாக அளபெடுத்து (நீண்டு) ஒலிப்பது அளபெடை. நயம் கருதி இவை செய்யுள்களில் பயன்படுத்தப்படுகின்றன. மோனை, எதுகை போன்ற பெரும்பாலான தொடைகளைப் போலவே அளபெடைத் தொடையும் செய்யுள் அடிகளின் முதற் சீரிலேயே அமைகின்றன.

ஒஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஎம் இதற்பட் டது.

என்னும் குறளில் அளபெடைத்தொடை அமைந்துள்ளது காண்க. இங்கே அடிகளின் முதற் சீரின் முதல் எழுத்தே அளபெடுத்து அமைந்துள்ளது. எனினும் அச் சீரின் எவ்வெழுத்து அளபெடுத்து அமைந்தாலும் அது அளபெடைத் தொடையே ஆகும்.

6. அந்தாதித் தொடை

ஒரு அடியில் ஈற்றில் அமையும் சீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதித் தொடை எனப்படும். அடுத்தடுத்த செய்யுள்களில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.
ஒரு அடியின் ஈற்றிலும் அடுத்ததின் முதலிலும் எழுத்து மட்டும் ஒன்றாய் வருவது எழுத்தந்தாதி எனலாம். இவ்வாறே, அசை, சீர், அடி என்பவை ஒன்றாக இருப்பது முறையே அசையந்தாதிசீரந்தாதிஅடியந்தாதி எனப்படலாம்.

7. இரட்டைத் தொடை

செய்யுள் ஒன்றின் ஒரு அடியில் முழுவதும் ஒரே சொல்லே அதன் சீர்களாகத் திரும்பத் திரும்ப வருமாயின் அது இரட்டைத் தொடை எனப்படும். எனினும் இச் சொல் எல்லா இடங்களிலும் ஒரே பொருளிலேயே வரவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு பொருள்களிலும் வரலாம்.

8. செந்தொடை

மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல், அவற்றில் உள்ள சொற்களின் இயல்பான தன்மையினால் அழகுற அமைவது செந்தொடை எனப்படுகின்றது.

                                 
தொடை விகற்பங்கள் (43)

மேலே கண்ட எட்டுத் தொடைகளிலே முதல் ஐந்து தொடை ஒவ்வொன்றுக்கும் அவை பாவிலே அமைந்து வருகின்ற இடங்களைப் பொறுத்து, எட்டு வகையான வேறுபாடுகள் யாப்பிலக்கண நூல்களிலே சொல்லப்பட்டுள்ளன. இவை யாப்பிலக்கணச் சொற் பயன்பாட்டு வழக்கில் “விகற்பங்கள்” எனப்படுகின்றன. மேற் கூறிய எட்டு விகற்பங்களும் வருமாறு.

 1. அடி
 2. இணை (1,2 சீர்களில் வருதல்),
 3. பொழிப்பு  (1,3 சீர்களில் வருதல்),
 4. ஒரூஉ (1,4 சீர்களில் வருதல்),
 5. கூழை (1,2,3 சீர்களில் வருதல்),
 6. மேற்கதுவாய்  (1,3,4 சீர்களில் வருதல்)
 7. கீழ்க்கதுவாய் (1,2,4 சீர்களில் வருதல்)
 8. முற்று (1,2,3,4 சீர்களில் வருதல்)

மோனை, எதுகை, முரண், அளபெடை, இயைபு ஆகிய தொடைகளில் எட்டுவகையான விகற்பங்கள் ஏற்படும்போது மொத்தம் நாற்பது தொடை விகற்பங்கள் உண்டாகின்றன. இவற்றுடன் விகற்பங்கள் இல்லாத அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடைகளும் சேர்ந்து நாற்பத்து மூன்று ஆகின்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: