சொல்

சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. சொல் என்றாலே தமிழில் சிறியது என்றும் பொருள் படுவது. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப் படுகின்றது. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லைக் கிளவிபதம் என்றும் கூறுவது உண்டு..

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கருதப்படும் தொல்காபியத்தில், சொல்லுக்கு விளக்கம் தரும் பல நூற்பாக்கள் சொல்லதிகாரம் என்னும் பகுதியில் உள்ளன. அவ்வதிகாரத்தில் முதல் நூற்பாவில் (தொல். 155)எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும். 158 ஆவது நூற்பாவில்
சொல் எனப் படுப பெயரே வினையே என்று
ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே
என்று சொற்கள் அடிப்படையில் பெயர்ச்சொல், வினைச்சொல் என்று இரண்டே வகை என்றும் பிற சொல் வகைகள் (உரிச்சொல், இடைச்சொல் முதலியன) இவை இரண்டிலிருந்து மருவி வருவனவே என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழில் ஓர் எழுத்தும் பொருள் தர வல்லது. காட்டாக கை, தை, மை, வா, போ. இவ்வகைச்சொற்களுக்கு ஓரெழுத்து ஒரு மொழி என்று பெயர்.

பகாப்பதம்

பகுக்கப்படாத இயல்பையுடைய சொற்கள் பகாப்பதம் ஆகும். அதாவது சேரடியா ஒரு சடப்பொருளையோ அல்லது கருத்துப்பொருளையோ குறித்து நிற்கும் சொற்கள் பகாப்பதம் ஆகும். காட்டாக நாய், மரம், வா.
தமிழ் இலக்கணம் (நூல்) தரப்பட்ட எடுத்துக்காட்டுகள்:

 • நிலம், நீர், மரம் – பொயர்ப்பகாப்பதம்
 • நட, வா, உண் – வினைப்பகாப்பதம்
 • மற்று, ஏ, ஒ – இடைப்பகாப்பதம்
 • உறு, தவ, நனி – உரிப்பகாப்பதம்

பகுபதம்

பகுக்கப்படும் இயல்புடைய சொற்கள் பகுபதம் ஆகும். பகுபதங்களை பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என இரண்டாக பகுக்கலாம். வினைப்பகுபதம் தெரிநிலை வினைப்பகுபதம், குறிப்பு வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்.

சொல்லின் வகைகள்

 1. பெயர்ச்சொல்
 2. வினைச்சொல்
 3. இடைச்சொல்
 4. உரிச்சொல்

Nature Glitter Graphics Dividers | GraphicsGrotto.com

இலக்கிய வகை

செய்யுள் ஈட்டிக்கொள்ளும் சொற்கள் என்று தொல்காப்பியம் சொற்களை வேறு வகையிலும் பாகுபடுத்திப் பார்க்கிறது. அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன.

 1. இயற்சொல் – தமிழ்நாட்டில் இயல்பாக வழங்கும் சொல் இயற்சொல்
 2. திரிசொல் – தமிழ்நாட்டில் இயல்பாக வழங்கும் சொல் சேரி வழக்கில் கொச்சைப்படுதல் உண்டு. அவற்றைச் செய்யுட்கு உரியனவாகத் திரித்துக்கொள்ளும் சொல் திரிசொல்.
 3. திசைச்சொல் – தமிழ்நாட்டின் அடையும் புடையும் கிடந்த திசைநாட்டார் வழங்கும் சொல் திசைச்சொல்.
 4. வடசொல் – ஆரிய மொழியில் வழங்கும் சொல் வடசொல்.

இயற்சொல்

இயற்சொல் என்பது செந்தமிழ் நிலத்து வழக்கு.  இதனைச் செஞ்சொல் என்றும் கூறலாம்

 1. செந்தமிழ் நிலம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. வையை யாற்றின் வடக்கு, மருத யாற்றின் தெற்கு, கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு 
 2. வடவேங்கடம், தென்குமரி, குணகடல், குடகடல் எல்லைக்கு உட்பட்ட நாடு \ தெய்வச்சிலையார் \
 3. முதல் கருத்தே பொருந்தும். இரண்டாவது கருத்து பொருந்தாது. காரணம், வையை யாற்றின் தெற்கில் கொற்கை, கருவூரின் மேற்கில் கொடுங்கோளூர், மருத யாற்றின் வடக்கில் காஞ்சிபுரம். இங்குப் பேசப்படுவது திசைச்சொல்லே

நிலம், நீர், தீ, வளி, சோறு, கூழ், பால், தயிர், மக்கள், மா, தெங்கு, கமுகு, பாளிதம், மலை,

திரிசொல்

திரிசொல் இரண்டு வகைப்படும்[3]

 1. ஒருபொருள் குறித்த வேறு சொல்
 2. வேறுபொருள் குறித்த ஒருசொல்

உரிச்சொல்லிலும் இந்த நிலை உண்டு.

எனவே உரிச்சொல்லுக்கும் திரிசொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்துகொள்ள வேண்டும்.

திரிசொல் முழுமையான சொல்லாக இருக்கும். உரிச்சொல் குறைசொல்லாக இருக்கும்.

ஒருபொருள் குறித்த வேறு சொல்

 1. கிள்ளை, தத்தை என்பன கிளியைக் குறிக்கும் வேறு சொற்கள்
 2. மஞ்ஞை, பிணிமுகம் என்பன மயிலைக் குறிக்கும் வேறு சொற்கள்
 3. வெற்பு, விலங்கர், விண்டு என்பன மலையுக் குறிக்கும் வேறு சொற்கள்
 4. மதி, திங்கள் என்பன நிலவைக் குறிக்கும் சொற்கள்

வேறுபொருள் குறித்த ஒருசொல்

 1. உந்தி = கொப்பூழ், யாழ்ப்பத்தல், தேர்த்தட்டு, ஆற்றுச்சுழி
 2. அளகு = கோழி, கூகை, மயில் ஆகியவற்றின் பெணனினத்தைக் குறிக்கும்.
 3. என்மனார், என்றிசினோர் போன்றவை வினையின் வகைப்பாட்டுத் திரிசொல்

திசைச்சொல்

தமிழ்நாட்டின் அடையும் புடையும் கிடந்த திசைநாட்டார் வழங்கும் சொல் திசைச்சொல்.

 1. பொங்கர் (பொதுங்கர்) நாடு
 2. ஒளி நாடு
 3. தென்பாண்டி நாடு – ஆ, எருமை என்பனவற்றைப் பெற்றம் என்பர், தம்மாமி என்பதனைத் தந்துவை என்பர். சோற்றினைச் சொன்றி என்பர்.

வடசொல்

வடநாட்டின் பழமையான கல்வெட்டுகள் அசோகன் காலத்தவை. அந்த எழுத்துக்களைப் பிராமி என்கின்றனர். காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. சிந்துவெளி முத்திரை எழுத்துக்களைப் பிராமி எழுத்துக்களாகக் கொண்டு படிக்க முயன்றுள்ளனர். சிந்துவெளி நாகரிகம் கி.மு. 3300-1300. பிராமி எழுத்துக்களாகப் படிக்கும் முயற்சி முழுமை பெறவில்லை. தமிழ்நாட்டுக் கற்காலப் பானை ஓடுகளில் காணப்படுபவை தமிழ்ப்பிராமி எழுத்துக்கள். இவற்றை நாம்தமிழி அல்லது தாமிழி என்னும் பெயரால் வழங்கிவருகிறோம். தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளிலும் இந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி தமிழ்.

அசோகன் பயன்படுத்திய எழுத்துக்களைத் தொடக்கத்தில் படித்தவர்களில் ஒருவரான அலெக்சாண்டர் கன்னிங்காம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி பிராகிருதம் என்கிறார். அது பஞ்சாபி மொழியோடு தொடர்புடையது என்பது அவர் கருத்து. இதனைப் பாலி மொழி என்றும் கூறுகின்றனர்.

ரிக் வேத வழிபாட்டு மொழி சமஸ்கிருதம். இந்த வேதம் கி.மு. 1500 காலத்தது என்று கூறுகின்றனர். தொல்காப்பியர் கூறும் வடசொல் இந்தச் சமற்கிருதச் சொற்கள் தமிழில் ஒலியேற்றம் செய்யப்பட்டவை.

தொல்காப்பிய, நன்னூல் உரையாசிரியர்கள் அவரவர் பார்வையில் வடசொல் என்று சொற்களைப் பட்டியலிட்டுள்ளனர்.
இவை சமற்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்தவை. அவற்றுள் சில இங்கு அகரவரிசை செய்யப்பட்டு முன்வைக்கப்படுகின்றன.

அமலம், அரன், அரி, அவை, உற்பவம், கமலம், காரகம், காரணம், காரியம், காலம், குங்குமம், சத்திரம், சயம், சாகரம், சுகி, ஞானம், ஞேயம், தசநான்கு, தமாலம், தாரம், திலகம், நட்டம், நிமித்தம், போகி, மூலம், மேரு, யானம், யோனி, வேணு என்று உரையாசிரியர்கள் காட்டும் வடசொல் பட்டியல் நீள்கிறது.
கந்தம், சாகரம் – பாகதப் பதிவாகி வந்தவை, நட்டம் – பாகத மொழியிலிருந்து வந்தது, [1]

நீர், பட்டினம், பவளம், மானம், மீனம், முத்து, வட்டம், வரி, வீரம் முதலான தமிழ்ச்சொற்களையும் உரையாசிரியர்கள் வடசொல் பட்டியலில் சேர்த்திருக்கின்றனர்.

Nature Glitter Graphics Dividers | GraphicsGrotto.com

                                                                              இயல்புச் சொல்வழக்கு

சொற்களையும் சொற்றொடர்களையும் வேறு பொருள் தருமாறு தகுதியாக்கிப் பயன்படுத்தாமல் உள்ளபடி வழங்குதல் இயல்புச் சொல்வழக்கு எனப்படும்.

இலக்கணம் உடையது, இலக்கணப் போலி, மரூஉ என்பன இயல்பு வழக்கில் அமைந்தவை.

இலக்கணம் உடையது

இலக்கணத்தின்படி அமைந்த சொற்கள்.

எ.கா.:

வளம், இன்பம், களவு போன்ற தனிமொழிகள்
மாநிலம், நற்றிணை போன்ற தொடர்மொழிகள்
இலக்கணப்போலி

தொடர்மொழிகளின் வரிசையை மாற்றி வழங்குதல் இலக்கணப்போலியாகும்.

எ.கா.:

இல்முன்நகர்புறம் என்பவற்றை முன்றில்புறநகர் என்று வழங்குதல்
மரூஉ

கிளவிகளை எழுத்துக்குறைத்தும் திரித்தும் வழங்குதல் மரூஉ எனப்படும்.

எ.கா.:

யாவர் – யார்
இந்நாடு – இந்தநாடு
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: