உரிச்சொல்

உரிச்சொல் என்பது பல்வேறுவகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்துஞ்சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.

உரிச்சொல் இருவகைப்படும்

  • ஒருபொருட்குறித்த பலசொல்
  • பலபொருட்குறித்த ஒருசொல்

எ.கா

ஒரு பொருள் குறித்த பல சொல்

  • சாலப்பேசினான்.
  • உறுபுகழ்.
  • தவஉயர்ந்தன.
  • நனிதின்றான்.

இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரேபொருளையுணர்த்துவன.

பலபொருட்குறித்த ஒருசொல்

  • கடிமனை – காவல்
  • கடிவாள் – கூர்மை
  • கடிமிளகு – கரிப்பு
  • கடிமலர் – சிறப்பு

இந்நான்கிலும்வரும் கடி என்னும் உரிச்சொல் – காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பலபொருள்களையுணர்த்தும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: