ராஜம் கிருஷ்ணன்

ராஜம் கிருஷ்ணன் (பிறப்பு: 1925) மூத்த தமிழக பெண் எழுத்தாளர் ஆவார். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு ‘கரிப்பு மண்கள்’ என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் ‘டாகுமான்சி’யை சந்தித்தவர். அதன் விளைவாக ‘முள்ளும் மலரும்’ என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியவர்.

இவரின் 80-க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.

விருதுகள்

கடந்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முகங்களுள் ஒன்றான திருமதி. கிருஷ்ணன் பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றவர். அவற்றுள் சில:

 • 1950—நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
 • 1953—கலைமகள் விருது
 • 1973—சாகித்ய அகாதமி விருது
 • 1975—சோவியத் லாண்ட் நேரு விருது
 • 1991—திரு.வி.க. விருது

நூல்கள்

இவரின் படைப்புகளுள் சில:

 • கூட்டுக் குஞ்சுகள்
 • வனதேவியின் மைந்தர்கள்
 • உத்தரகாண்டம்
 • மாறி மாறி பின்னும்
 • மலர்கள்
 • பாதையில் பதித்த அடிகள்
 • உயிர் விளையும் நிலங்கள்
 • புதியதோர் உலகம் செய்வோம்
 • பெண் விடுதலை
 • இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
 • காலந்தோறும் பெண்மை
 • கரிப்பு மணிகள்
 • வளைக்கரம்
 • ஊசியும் உணர்வும்
 • வேருக்கு நீர்
 • பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
 • இடிபாடுகள்
 • அலை வாய்க்கரையில்
 • சத்திய தரிசனம்
 • கூடுகள்
 • அவள்
 • முள்ளும் மலர்ந்தது
 • குறிஞ்சித் தேன்
 • சுழலில் மிதக்கும் தீபங்கள்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: