பிரபஞ்சன்

பிரபஞ்சன் ( பி. ஏப்ரல் 271945) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

பிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். இவரது தந்தை ஒரு கள்ளுக்கடை வைத்திருந்தார். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். தனது வாழ்க்கையை தஞ்சாவூரில் ஆசிரியராகத் தொடங்கினார். குமுதம்ஆனந்த விகடன் மற்றும்குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தார். இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி என்ற பத்திரிக்கையில் 1961ல் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.. இதுவரை 46 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதியுள்ளார். 1995ல் இவரது வரலாற்றுப் புதினம் வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்பபுதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள்ஹிந்திதெலுங்குகன்னடம்ஜெர்மன்பிரெஞ்சுஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவரதுநாடகமான முட்டை டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள்பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக்கப் பட்டுள்ளது.இவரது மனைவியின் பெயர் பிரமிளா ராணி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர் சென்னையிலும் புதுச்சேரியிலும் வசித்து வருகிறார்.

விருதுகள்

 • சாகித்திய அகாதமி விருது – வானம் வசப்படும் (1995)
 • பாரதிய பாஷா பரிஷத் விருது
 • கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது – மாகாநதி
 • இலக்கியச் சிந்தனை விருது – மானுடம் வெல்லும்
 • சி. பா. ஆதித்தனார் விருது – சந்தியா

எழுதிய நூல்கள்

(முழுமையானதல்ல)

புதினங்கள்

 • வானம் வசப்படும்
 • மகாநதி
 • மானுடம் வெல்லும்
 • சந்தியா
 • காகித மனிதர்கள்
 • கண்ணீரால் காப்போம்
 • பெண்மை வெல்க
 • பதவி
 • ஏரோடு தமிழர் உயிரோடு

[தொகு]குறு நாவல்கள்

 • ஆண்களும் பெண்களும்

சிறுகதைத் தொகுப்புகள்

 • நேற்று மனிதர்கள்
 • விட்டு விடுதலையாகி
 • இருட்டு வாசல்
 • ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்

நாடகங்கள்

 • முட்டை
 • அகல்யா
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: