இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதி (1930-) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டுகாலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் என பல படைப்புக்கள் படைத்துள்ளார். சில நாடகங்களும் படைத்துள்ளார். சாகித்திய அகாதமி விருது தவிர தமிழக அரசு விருது, சரஸ்வதி சம்மான் போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

பள்ளிப் பருவத்தில் இவர் எழுத்தாளர் தி. ஜானகிராமனின் மாணவர். தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 1960களில் பணியாற்றி வந்தார். இவர் முதலில் ஆனந்த விகடன் போன்ற கிழமை இதழ்களில் (வார இதழ்களில்) எழுதத்தொடங்கினார். பின்னர் தீபம்கல்கிகணையாழி ஆகிய இதழ்களிலில் எழுதிவந்தார்.

‘மழை’ நாடகம் இவர் படைத்த முதல் நாடகம் ஆகும். நிலம் என்னும் நல்லாள் எனும் தலைப்பில் நாவலாக எழுதிப் பின்னர் நண்பர் ஒருவர் நாடகமாக எழுதச்சொன்னதால் நாடகமாக எழுதினார். பிற்காலத்தில் இவர் எழுதிய “நந்தன் கதை” [1],ராமானுஜர், ஔரங்கசீப் என்னும் நாடங்களும், “ஏசுவின் தோழர்கள்” போன்ற படைப்புகள் நல்ல வரவேற்பை பெற்றன.

நாடக நூல்கள்

 • மழை
 • போர்வை போர்த்திய உடல்கள்
 • கால எந்திரம்
 • நந்தன் கதை
 • ஒளரங்கசீப்
 • ராமானுஜர்
 • கொங்கைத்தீ
 • பசி
 • கோயில்

பிற நூல்கள்

 • ஏசுவின் தோழர்கள்
 • காலவெள்ளம்
 • சத்திய சோதனை
 • ஒளரங்கசீப்
 • குருதிப்புனல்
 • தந்திர பூமி
 • சுதந்தர பூமி
 • வேதபுரத்து வியாபாரிகள்
 • கிருஷ்ணா கிருஷ்ணா
 • Ashes and Wisdom
 • மாயமான் வேட்டை
 • ஆகாசத் தாமரை
 • கிருஷ்ணா கிருஷ்ணா
 • அக்னி
 • தீவுகள்
 • வெந்து தணிந்த காடுகள்
 • வேர்ப்பற்று
 • Wings in the Void
 • Into this Heaven of Freedom
 • திரைகளுக்கு அப்பால்
 • ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன
 • இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்

விருதுகள்

1977ல் குருதிப்புனல் என்னும் புதினத்திற்கு இந்திய சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: