அகிலன்

 

அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 271922 – ஜனவரி 311988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர்.சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் சீனம்மலாய்,ஜெர்மன்ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

‘பாவை விளக்கு’ திரைப்படமாக எடுக்கப்பட்டது. இவரது ‘கயல் விழி’ என்னும் புதினம்மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.

அகிலன் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், தினமணி போன்ற இதழ்களில் 1950கள் முதல் 80கள் வரை அகிலன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு இருபாகங்களாக வெளியாகி இருக்கின்றன.

படைப்புகள்

புதினங்கள்

 • பாவை விளக்கு (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.)
 • சித்திரப்பாவை
 • நெஞ்சின் அலைகள்
 • எங்கே போகிறோம் ?
 • பெண்
 • பால்மரக்காட்டினிலே
 • துணைவி
 • புதுவெள்ளம்
 • வாழ்வெங்கே (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.)
 • பொன்மலர்
 • சிநேகிதி
 • வானமா பூமியா
 • இன்ப நினைவு
 • அவளுக்கு
 • வேங்கையின் மைந்தன்
 • கயல்விழி (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.)
 • வெற்றித்திருநகர்

கலை

 • கதைக் கலை
 • புதிய விழிப்பு

சுயசரிதை

எழுத்தும் வாழ்க்கையும்

மொழிபெயர்ப்பு நூல்கள்

தாகம் ஆஸ்கார் வைல்ட்

சிறுகதை தொகுதிகள்

 • சத்ய ஆவேசம்
 • ஊர்வலம்
 • எரிமலை
 • பசியும் ருசியும்
 • வேலியும் பயிரும்
 • குழந்தை சிரித்தது
 • சக்திவேல்
 • நிலவினிலே
 • ஆண் பெண்
 • மின்னுவதெல்லாம்
 • வழி பிறந்தது
 • சகோதரர் அன்றோ
 • ஒரு வெள்ளை சோறு
 • விடுதலை
 • நெல்லூர் அரசி
 • செங்கரும்பு

சிறுவர் நூல்கள்

 • தங்க நகரம்
 • கண்ணான கண்ணன்
 • நல்ல பையன்

பயண நூல்கள்

மலேசியா சிங்கப்பூரில் அகிலன்

கட்டுரை தொகுப்புகள்

 • நாடு நாம் தலைவர்கள் (கட்டுரைகள், 2000)
 • வெற்றியின் ரகசியங்கள்

ஒலித்தகடு

நாடும் நமது பணியும் – அகிலன் உரை

விருதுகள்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: